இலங்கையை ஒரு தளமாக மேற்குலகம் பயன்படுத்துவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கூறியவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தற்போது கேள்விகுறியாகியுள்ள நிலையில், இந்தவாரம் சென்னையிலிருந்து விமானமொன்று கொழும்பிற்கு வந்துள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த விமானத்தில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உள்ளார் அவரை கைது செய்யுமாறு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இவர்கள் நடவடிக்கை எடுக்க முன்னர் பயணிகள் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
பின்னர் அதில் 5 பேர் சந்தேகத்திற்கிடமாக பயணித்தனர் என்று கூறப்பட்டது. அவர்கள் பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை. அதனை தொடர்ந்து வந்த சிங்கப்பூர் விமானத்தையும் சோதனை செய்துள்ளனர்” என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய வேண்டும் என கோரியுள்ளார்
