
அமேசான் நிறுவனமானது முப்பதாயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஒவிட் தொற்று காலத்தில் அதிக ஊழியர்களை இணைத்துக் கொண்டதாகவும் இதன் காரணமாக அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்குறைப்பு அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் 1.55மில்லியன் ஊழியர்கள் உள்ளனர் எனவும் அதில் 350 000 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 27000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில் பெருகிவரும் தொழிநுட்ப வசதிகளும் இவ்வாறான ஆட்குறைப்புகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

