இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் விகாரையை சூழவுள்ள பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்பதுடன், கனரக வாகனங்களின் நடமாட்டமும் அந்த பகுதிகளில் மட்டுப்படுத்தப்படும். கண்காட்சிக்கு வரும் பக்தர்கள் ஒதுக்கப்பட்ட வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்துமாறும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நெரிசலை தவிர்க்க விசேட வாகன தரிப்பிடங்கள் மற்றும் அங்கிருந்து விகாரைக்கு செல்ல விசேட போக்குவரத்து (Shuttle services) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *