
கையடக்க தொலைபேசி விற்பனை கடையை உடைத்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மிஹிந்தலை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை ஒன்றிலேயே, நேற்று புதன்கிழமை 18ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சுமார் 20 க்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளதாக அதன் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைபாட்டை மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
