இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது.இது இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.தூதரகத்தின் முழுமையான பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, அவசர பாதுகாப்புத் தகவல்கள் (Safety and Security Information) மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிரப்படவுள்ளன.மேலும் ஏனைய வழக்கமான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்க முடக்கம் ஏற்பட்ட போதிலும், இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) சேவைகள் வளங்கள் உள்ளவரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *