THADAYAM tourism
THADAYAM tourism

உலகத்திலே பிளாஸ்டிக் இல்லாத ஒரே இந்திய மாநிலம்..,

எது தெரியுமா?

உலகின் பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற பெருமையை இந்திய மாநிலமான சிக்கிம் பெற்றுள்ளது.2016ஆம் ஆண்டில் உலகின் முதல் முழுமையான இயற்கை மாநிலமாக சிக்கிம் மாறியது.ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை படிப்படியாக தடை செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை பின்பற்ற விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவித்தது.  

பத்து வருடங்களுக்கும் மேலான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான விதிமுறைகளுக்குப் பிறகு, உலகின் முதல் 100% இயற்கை மாநிலமாக சிக்கிம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.சிக்கிம் படிப்படியாக 75,000 ஹெக்டேர் விவசாய நிலங்களை இயற்கை விவசாய நிலங்களாக மாற்றியுள்ளது.மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகளையும் எடுத்தது.இங்குள்ள மக்கள் மறுசுழற்சி, மக்கும் பொருட்கள் மற்றும் துணிப் பைகளை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றன.

வீடுகள் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.சிக்கிமின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மூங்கில் பாட்டில்கள் உள்ளூர் கைவினைஞர்களால் இயந்திர உதவியின்றி கையால் தயாரிக்கப்படுகின்றன.சிக்கிம் மாநிலத்தை பசுமையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க, மக்களும் அரசாங்கமும் இணைந்து ஒத்துழைக்கிறார்கள். இதே சுற்றுச்சூழல் விதிமுறைகளை சுற்றுலாவாசிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இங்கு கடுமையான அபராதங்கள் விதிப்பதால் தெருவில் யாரும் குப்பைகளை கொட்டப்படுவதில்லை.

Gangtok is built of houses built on the mountain sides. Colorful and steep, the inclines take some getting used to.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *