உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவரிசைப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் மதிப்பு மிக்க கடவுச்சீட்டாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றடைந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணம் செய்யலாம். அதேபோல ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் 188 நாடுகளுக்கான அணுகலுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. குறித்த பட்டியலில் இலங்கை 93ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 42 நாடுகளுக்கு மாத்திரமே விசா இல்லாமலோ அல்லது சென்றடைந்தவுடன் விசா பெறும் வசதியுடனோ பயணம் செய்ய முடியும். இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் (24 நாடுகளுக்கான அனுமதி) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *