ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும்கொழும்பில் உள்ள 4 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *