கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மீது மோதியுள்ளார்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *