
கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி, கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்படும் வரியை, தான் 100 சதவீதம் பின்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் குறித்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு எதிராக, பிரித்தானியா, டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 7 ஐரோப்பிய நாடுகள் இதுவரை எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு, சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஒரு தீவை வாங்குவதற்காக நட்பு நாடுகள் மீது வரி விதிப்பது ஏற்க முடியாதது’ என ஐரோப்பியத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

