
கிரிபத்கொடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி ரூபா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தாய்லாந்து பிரஜை இந்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
