
முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவதுபயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் முச்சக்கர வண்டியின் தீ பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்துள்ளனர்.குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
