
சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் கனடாவில் சிக்கின்கூனியா தடுப்பூசி கிடைக்கிறது எனவும் கனேடிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள் வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
