தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் யா/ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியர் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *