தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரோ சாங்-வோன் (Roh Sang-won): முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தளபதிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சோ ஜி-ஹோ (Cho Ji-ho): முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிம் பொங்-சிக் (Kim Bong-sik): முன்னாள் சியோல் பெருநகர காவல்துறை பிரிவின் தலைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மொக் ஹியூன்-டே (Mok Hyun-tae): தேசிய சபையின் காவல்துறை பாதுகாப்புக் பிரிவின் முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் மேன்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *