
புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” – Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள்.
உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை வெளியேற்றும் அந்த கடினமான முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.
தமிழர்கள் எவ்வாறு இலங்கையில் ஒரு தனித்துவமான தேசிய இனமோ, அதோ போல்தான் முஸ்லிம்களும் இன்னொரு தேசிய இனம். ஒரே மொழியைப் பேசினாலும் ஏனைய சமய, நாகரிக, பொருளாதார வாழ்வு, கலை, கலாச்சாரம், பண்புகளில் அவர்கள் வேறுபட்டவர்கள். ஒரு மக்களாட்சியை கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில், தேர்தல் அரசியலில் வேண்டும் என்றால் இந்த ஒரே மொழி பேசும் வேறு வேறு தேசிய இனங்கள் இணைந்து பயணிக்கலாம். ஆனால் அங்கு நடந்ததோ ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம். இதில் இன்னொரு தேசிய இனம் இணைந்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அப்படியிருந்தும், பல முஸ்லிம் சகோதரர்கள் புலிகள் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள், மாவீரர்களாயிருக்கிறார்கள்.
- [ ] சிங்கள அதிகாரம் முஸ்லிம்களை தமிழ்மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு ஏவிவிட்டு, அவர்களுக்கிடையில் பிணக்குகளை அதிகரித்து அந்த இரண்டு இனங்களையும் ஒரே நேரத்தில் பலவீனப் படுத்தலாம் என்ற நினைப்பில் இருந்தது. பல முஸ்லிம்கள் இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களில் உள்வாங்கப் பட்டுக் கொண்டிருந்தனர்.
- [ ] இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை முஸ்லிம்கள் பிரதிநித்துவ அரசியலையும் , மத்திய அரசாங்கத்துடன் இணக்க அரசியலையும் ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களுக்கென்று தனியான தன்னாட்சி, சுயாட்சி சுய நிர்ணய உரிமைகளுக்காக அவர்கள் ஒன்றிணைந்து போராடவில்லை. முஸ்லிம்களின் அரசியல் பலத்திற்காக கட்டியெழுப்பியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கூட இன்று பலமிழந்து நிற்கிறது.
- [ ] பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணயப் போராட்டம் வெற்றி பெறும் போது, அது அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தையும் பாதுகாத்துக் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
- [ ] 2001 ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்தைகளுக்கு முன் முஸ்லிம், மலையக அரசியல் அரசியல் பிரதிநிதிகளை வன்னிக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்களையும் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்ற வைத்ததன் மூலம், தமிழர் விடுதலைப் போராட்டம் சிங்கள அடக்கு முறைக்கு எதிரான ஒன்றே மட்டும் என்ற ஆணித்தரமான கருத்தியலை புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.
- [ ] உலகின் பல போராட்ட இயக்கங்கள் (இன்று வரை பாலஸ்தீனத்தில் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அடங்கலாக) பொதுமக்களை குறிவைத்து படுகொலை செய்யும் நிகழ்வுகள் போர்க்களங்களில் சாதாரண நிகழ்வுகளாக இருக்க, அதியுயர் ராணுவ பாதுகாப்பு நிலைகள் வரை தங்களின் ராணுவ, புலனாய்வு தாக்குதல் திறனை மதிநுட்பத்தை, திறனாய்வை கற்பனைக்கு அப்பால் கொண்டிருந்த புலிகள் எந்த சிங்கள கிராமங்களையோ, மக்களையோ தாக்கிஇருக்கவில்லை. தாங்களின் ராணுவ நடவடிக்கைகளில் எந்த சிங்கள மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற உயரிய மாண்பினை அவர்கள் இறுதி நொடி வரை கடைப் பிடித்தார்கள்.
இன்று ஒவ்வொரு ஈழத்தமிழனும் ஏதோவொரு வலி, வேதனை, இழப்புக்களை சுமந்து கொண்டு வாழ்ந்துகொண்டிருக்க, அதே வேதனை, வலிகள், துன்பங்கள், இழப்புகளை சிங்களவர்களோ, முஸ்லிம்களோ கொண்டிருக்காமைக்கு, தங்களை அழித்தும் ஏனைய இனங்களை பாதுகாத்துக் சென்ற புலிகள் அமைப்புதான் காரணம்.
இனவெறி, இனத்துவேசம், இனப்பாகுபாடு, இனஒதுக்கல், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்னவென்றே தெரியாமல் அரைகுறையா சட்டம் படித்தால் அரைகுறையா தான் சிந்திக்கத் தோன்றும்.
