
நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தனது தந்தை (மஹிந்த ராஜபக்ச) எப்போதும் நம்பினார்,” என நாமல் குறிப்பிட்டார். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஒன்றிணைவதற்கு எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
