
கூட இருந்த பலர் இயக்கத்தைவிட்டு விலகி வெளிநாடுகளிற்கு சென்றபோதுகூட அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவில்லை.
போரில் காயம்பட்ட காலுடன் விந்தி, விந்தி நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதுகூட அந்தவலியினைத்தாண்டிய புன்னகை மட்டுமே அவன் முகத்தில் இருந்தது.
கூடவே களமாடிய, அரசியலில் பயணித்த பலதோழர்கள் துரோகம் செய்தபோதுகூட தங்காமுடியாத வேதனையினைத்தாண்டிய புன்னகைமட்டுமே அவன் முகமெங்கும் பரவியிருந்தது.
தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள், தவறினால் நீங்களும், உங்கள் தலைவரும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிவரும், அதையெல்லாம் தாண்டி கொழும்பைத்தாண்டி தமிழர்தேசத்திற்கு நீங்கள் செல்வதுகூட சாத்தியமற்றுப்போகும் என்றாவாறெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் மிரட்டப்பட்டபோதுகூட அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவேயில்லை.
பேரம்பேசி, ஆசைகாட்டி, பயம்காட்டி, பூச்சாண்டிகாட்டி அவனை மடக்கிவிட துடித்த சர்வதேச சதிகளிற்கு அவன் தந்த பதில் மெளனமான புன்னகை ஒன்று மட்டுமே..
இந்திய/ சர்வதேச போக்கிரிகளின் துணையுடன் இலங்கை அரசால் கோழைத்தனமாக அவனை கொல்லமுடிந்தது என்பது உண்மைதான்.
ஆனால் மனிதவரலாற்றின் ”அறம்” என்பது அவனின் புகழ்பாடிக்கொண்டேயிருக்கும்.
குண்டுகள் அவனின் உடலை சிதைத்த அந்தகணம் கூட அவனின் முகத்தில் பெரும்புன்னகை ஒட்டிக்கொண்டேயிருந்திருக்கும்.
உலக மசிருகள் எல்லாம் சேர்ந்துகூட எங்களை அசைக்கமுடியவில்லை என்பதும்,
நீங்கள் எல்லாம் அந்த மசிருக்கும் கீழேதான் என்பதான நினைவுகளுடன்தான் அவன் வித்துடல் சிதறியிருக்கும்..
தமிழினத்தின் அரசியல் அகராதி அவன்..
வீரவணக்கம்…
பதிவு – நடராஜா அன்பரசன்
