
நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள் (Pilots) மாத்திரமே இருந்துள்ளனர்.காயமடைந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

