நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் ‘ஐலைவ் கனெக்ட்’ (iLive Connect) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ராகுல் சந்தோலா மற்றும் இதய நோய் நிபுணர் வைத்தியர் விவேகா குமார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, நோயாளிகள் அணியக்கூடிய சிறிய சென்சார்கள் மூலம் அவர்களின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், ஒட்சிசன் அளவு மற்றும் உடல் வெப்பநிலை போன்ற முக்கியத் தரவுகளைத் தொடர்ச்சியாகச் சேகரிக்கிறது.இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் உடனடியாக ஒரு பிரத்தியேக மருத்துவக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுகின்றன, அங்குள்ள மருத்துவர்கள் நோயாளிகளின் உடல்நிலையை நேரலையாகக் கண்காணிக்கின்றனர்.இந்தத் தொழில்நுட்பத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், நோயாளியின் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பே செயற்கை நுண்ணறிவு அதனைத் துல்லியமாகக் கண்டறிந்து மருத்துவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.இதன் மூலம் ஆபத்தான சூழலில் உள்ள நோயாளிகளுக்குச் சில நிமிடங்களிலேயே மருத்துவ உதவியை வழங்க முடியும்.குறிப்பாக, அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகள் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது 76 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *