பாகிஸ்தான் தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி இருந்ததாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும் அதிகமாக F-16 விமானங்கள் பாகிஸ்தானின் மேற்குப் புறமாக அரேபியக் கடலுக்கு அருகாக Gwadar என்ற பிரதேசத்திலுள்ள Pasni வான்படைத்தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவிடம் இருக்கின்ற S-400 ஏவுகணைகள் பற்றிய அச்சம் காரணமாகவே பாகிஸ்தான் தன்னிடம் இருந்த F-16 விமானங்களை இந்திய எல்லைகளை விட்டு வெகுதூரம் நகர்த்தியிருந்ததாகக் செய்திகள் கிடைக்க பெற்றுள்ளன.