
த. வெ. க தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய் அவர்கள் மிகவும் உருக்கமாக கண்ணீர் விட்டு அழுததுடன் ஒவ்வொருவரினதும் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன்
“என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்துக்கொள்ளுங்கள், உங்களுடன் எப்போதும் நான் இருப்பேன் “எனவும் தெரிவித்தார் எனவும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் 27ம் திகதி த. வெ. கவினர் ஒழுங்கு செய்த மக்கள் சந்திப்பின் போது, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 42பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
