பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு , இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசுக்குமான வர்த்தகத் தொடர்புகள் குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிட்களில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது.ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட’ (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *