பயணி உயிரிழப்பு!
சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இன்று காலை ஒரு சொகுசு கப்பலில் 60 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசரமாக கரைக்குத் திரும்பியது.எம்.எஸ்.சி. விர்டுவோசா(MSC Virtuosa) என்ற அந்த கப்பல் இங்கிலாந்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரைக்கு மீண்டும் திரும்பியுள்ளது, கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மே 3ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானிய கடல் எல்லைக்குள் கப்பல் திரும்பியவுடன், பொலிஸார் விரைந்து கப்பலில் ஏறி எக்ஸிடரைச்(Exeter) சேர்ந்த 57 வயது நபரை கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த உயிரிழப்புக்கு காரணமான தகராறு தொடர்பான முழு விவரங்களையும் கண்டறியும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் முதன்மை புலனாய்வு அதிகாரியான துப்பறியும் தலைமை ஆய்வாளர் மாட் கில்லூலி வழங்கிய தகவலில், “இது கப்பலுக்குள் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவமாகவே தெரிகிறது. என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். மேலும், எங்கள் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த கப்பல் ஊழியர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
