
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்தத் தடைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின்படி, இன்று (5) முதல் அடுத்த 6 மாத காலத்துக்கு பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் முதன்மை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
