
அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.
அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் காட்சியானது, பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.
அதே போன்று தாதி ஒருவர், மருந்து சிட்டைகளைக் காயவைக்கின்ற காட்சியும் பொதுமக்களின் பேசுபொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

