
நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ள போதைப்போருள் ஒழிப்பு தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அதன் படி, 1818 என்கிற அவசர தொலைபேசிக்கு அழைப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மிக முக்கிய புள்ளிகள் பலரும் இனங்காணப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அவசர தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இந்த நடவடிக்கை துணை புரியும் என பொது மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

