முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழுவினருக்கு வழங்கியமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வெலிவேரியவில் மீட்கப்பட்ட துப்பாக்கி தன்னுடையது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *