
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வி அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அது 178.29 மில்லியன் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
