
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தும், சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

