மூத்த விவசாயிக்கு சிவன் சிறுவர் கழகத்தால் கிடைத்த கௌரவம்!!

மூத்த விவசாயிக்கு சிவன் சிறுவர் கழகத்தால் கிடைத்த கௌரவம்!!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் – சிவன் சிறுவர்கழக மாணவர்களால் மூத்த விவசாயி ஒருவர் “ஏரால் வேந்தன் என கௌரவிக்கப்பட்டுள்ள நிகழ்வு சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் சுன்னாகம் பிரதேசத்தினை சேர்ந்த நாகநாதர் தர்மராசா என்கிற மூத்த விவசாயியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரது விவசாய வாழ்வில் உறுதுணையாக இருந்த துணைவியாரும் கௌரவிக்கப்பட்டுள்ளமை கூடுதல் மகிழ்வை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.

விவசாயிகளுக்கான மதிப்பும் மரியாதையும் பற்றி யாரும் பெரியளவில் சிந்திக்காத நிலையில் சிறார்களின் இச்செயற்பாடானது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும்.

மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *