யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் கணவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.தம்பதிகள் , கத்தி கூச்சல் இட்ட போதும் , அச்சத்தில் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது முகத்தை அடையாளம் காண முற்பட்ட வேளை அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் மதிய நேரமே விசாரணை நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *