யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடாத்தி வருகின்ற நிலையில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்து பியர் போத்தலை உடைத்து தலை, வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாக குத்தி காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.காயத்தை ஏற்படுத்திய கணவர் தப்பியோடியுள்ள நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *