யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மிகவும் அவசியமானது என்பதை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *