
வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண சந்தா(Paid Subscription) முறையை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது.அதேவேளையில், தற்போது கிடைக்கும் அடிப்படை வசதிகள் வழக்கம் போல் இலவசமாக கிடைக்கும். கட்டண சந்தாவில், இன்ஸ்டாகிராமில் மற்றவர்களின் ஸ்டோரிகளைஅவர்களுக்கு தெரியாத வகையில் பார்க்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.
