
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
