
டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.தற்போது ai.com என்ற டொமைனை வாங்க தொழிலதிபர் ஒருவர் 70 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.634 கோடி) செலவிட்டுள்ளார். Crypto.com நிறுவனர் கிறிஸ் மார்சலே(Kris Marszalek) ai.com டொமைனை 70 மில்லியன் டொலருக்கு வாங்கியதாக அறிவித்துள்ளார்.தற்போது இதுவே உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டொமைன் என்ற பெருமையை பெற்றுள்ளது. மலேசியாவை சேர்ந்த தொழிலதிபரான அர்சியன் இஸ்மாயில் என்பவரிடமிருந்து இதை வாங்கியுள்ளார். அதேவேளையில், இந்த பரிவரித்தனை முழுவதும் கிரிப்டோ மூலமாக நடைபெற்றுள்ளது.
