O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (18) இடம்பெற்றது.பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகின்ற்து. மேலும் ஆசிரியர் ஒருவர் முச்சக்கர வண்டியை செலுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், முச்சக்கரவண்டியில் தீப்பற்ற ஆரம்பித்ததையத்து பின்னால் வந்த இலங்கை மின்சார சபைக்குரிய லொறியில் பயணித்த பணியாளர்கள் விரைந்து முச்சக்கர வண்டியை நிறுத்தி, தீயை கட்டுப்படுத்தியதுடன், ஆசிரியர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன், பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் , மீளப் பெற்றுக் கொள்ளவும் உரிய வாகன ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *