
தன்னிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில், அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் அவரிடம் அதிநவீன 18 லம்போர்கினி கார்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும், குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் எனக்கு தாருங்கள். அந்த லம்போர்கினியை ஓட்டுவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.
தன்னிடம் இருப்பதாக கூறப்பட்ட, அந்த வாகனங்களின் இருப்பை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “நான் வாழ்நாளில் லம்போர்கினி ஓட்டியதில்லை! அரசாங்கமேனும் லம்போர்கினி கொடுத்தால் அவர்களையும் ஒரு ரவுன் கூட்டிச் செல்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள், அந்த வாகனங்கள் இருக்கும் இடத்தைக் காட்டினால் அல்லது விமானம் மூலம் இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்களின் இருப்பைக் கண்டுபிடித்தால், அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றையாவது ஓட்ட விரும்புவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.