119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 ஐ தவறாகப் பயன்படுத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

போலி தகவல்களுடன் வரும் அழைப்புகளால் உண்மையான பிரச்சினகளைத் தீர்க்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும்

119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *