
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இம் மாதம் 119வது முறையாக நடத்தப்பட உள்ளது.
மூன்று நாள் போட்டி மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

