உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் நாளை (31ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் (01ஆம் திகதி) வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன.இதற்கமைய அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன.2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று லட்சம் பரீட்சார்த்திகள் பங்கேற்றியிருந்தனர்.இதற்கிடையில், அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 26 முதல் கோரப்பட்டுள்ளதுடன், கடைசி திகதி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *