சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

 முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் மற்றும் அதிகார மட்ட நபர்கள் சிக்கக்கூடும் என்றும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் பெயர்களும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மிகவும் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் இறுதியில் நாட்டிற்கே எதிராக சதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் நிலைக்குச் செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்து உதவி வழங்கியதாகக் கூறப்படும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளும் விசாரணையின் கவனத்திற்கு வரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும், அதன் விளைவாக அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பரபரப்பான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அருஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் அவரது தனிப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையிலானவை என்பதுடன், அவை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *