ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

 அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

“அல்பேனியா விற்பனைக்கு அல்ல” என்ற வாசகங்களை முழங்கியபடி, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த “வியோசா-நார்தா” பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியில் இந்த கட்டுமானத்தை அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், அல்பேனியாவின் புலம்பெயர்ந்த மக்களும் பெருமளவில் இணைந்துள்ளதோடு, இந்த சொகுசு விடுதி அமையவுள்ள பகுதியில் வாழும் பூநாரைகள் உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளின் வாழ்வாதாரம் அழியும் அபாயம் உள்ளதாகக் கூறி, பூநாரைகளின் படங்களை ஏந்தி மக்கள் போராடுவதால் இது “பூநாரை புரட்சி” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் வெறும் சுற்றுச்சூழல் போராட்டமாக மட்டுமின்றி, பிரதமர் எதிரி ராமா தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாக உருவெடுத்துள்ளதால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *