பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும், சபாநாயகர் அதனை நிராகரித்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்று (23) சபாநாயகரிடம் விவாதம் நடத்துவதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தது.

இந்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்க இயலாது என்று கூறியமையினால் நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *