
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி, உலகின் பெரும்பாலான முக்கிய பொருளாதார நாடுகளின் மீது 10% முதல் 50% வரை வர்த்தக வரிகளை ட்ரம்ப் விதித்தார். இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறிய செயல் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி ‘சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்’ (IEEPA) கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டதை மனுதாரர்கள் எதிர்த்துள்ளனர்.
