தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்கு திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய (1) தினம் இடம்பெற்றது.சோழன் உலக சாதனை புத்தகத்தின் வரலாற்று பதிவாக ( Cholan book of International world Record 2026) மேற்படி நிகழ்வில் குறுகிய நேரத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள் இங்கு தெரிவு செய்யப்ட்டு உலக சாதனையாளராக பிரகடனப்படுத்தப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில், அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி, ஒப்பனை கலைஞர், பிசின் கலை, நகை வடிவமைப்பு, மெஹந்தி கலைஞர், கேக் வடிவமைப்பாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 57 பேர்கள் பங்கேற்றனர்.மேற்படி விருது வழங்கும் நிகழ்வில் தமிழகத்தின் சின்னத்திரை சங்கத்தின் உறுப்பினரும் நடிகருமான சேக் பரீத் பிரதம அதிதியாகவும், தாரகா குருகந்தா மற்றும் ருக்மல் சேனநாயக்க ஆகியோர் கலந்து கொண்டார்.தையல்கலையில் 15 நிமிடங்களில் கடமையை முடித்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த ஜெயந்தன் மேரி சுலக்சனா என்பவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். வழங்கப்பட்ட சிறப்புப் பணியை 15 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக முடித்து உலக சாதனை படைத்து மற்றும் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து வடமராட்சி கிழக்கிற்கு பெருமைசேர்த்த மேரி சுலக்சனாவிற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *