மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

உலகளாவிய பங்குச் சந்தைகளில் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் நிலவி வரும் தற்போதைய மதிப்பீடுகள் தவறானவை என ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களும், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.சமீபகாலமாக மென்பொருள் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து வரும் நிலையில், சந்தை ஆய்வாளர்கள் பலரும் இது குறித்து எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வீழ்ச்சி ஒரு தற்காலிகமான பின்னடைவே அன்றி, மென்பொருள் துறையின் வீழ்ச்சி அல்ல என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது மென்பொருள் துறையை அழித்துவிடும் என சந்தையில் ஒரு அச்சம் நிலவுகிறது. ஆனால், ஜே.பி. மோர்கன் நிபுணர்களின் கருத்துப்படி, AI தொழில்நுட்பமானது மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் காரணியாகவே அமையும் எனக் கூறப்படுகின்றது.பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மென்பொருள் நிறுவனங்களின் எதிர்கால வருமானத்தை மிகக் குறைவாக மதிப்பிட்டு வருவதாகவும், இது முதலீட்டாளர்களுக்கு ஒரு தவறான சமிக்ஞையை வழங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மென்பொருள் துறையில் தற்போது நிலவும் மந்தநிலை, சிறந்த பங்குகளை குறைந்த விலையில் வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்பட வேண்டும் எனத் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைத்து, வினைத்திறனை அதிகரிக்க மென்பொருட்களையே அதிகம் நாடுகின்றன. இத்தகைய சூழலில், சந்தையின் தற்போதைய போக்கு யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்பது இவர்களது கருத்தாகும்.மென்பொருள் சந்தை மீண்டும் எழுச்சி பெறும் போது, தற்போது சந்தை வைத்துள்ள கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என இந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *