‘நேவி சீல்’ முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்

‘நேவி சீல்’ முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்

அமெரிக்க கடற்படையின் எலைட் ‘நேவி சீல்’ (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற ‘SEAL Trident’ முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய லெப்டினன்ட் கோயன் சமித (Lieutenant Koyan Chamitha) இன்று அதிகாலை காலமானார். வெலிசர கடற்படை விடுதியில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடற்படையின் விசேட படகுப் படையணியை (Special Boat Squadron – SBS) சேர்ந்த லெப்டினன்ட் சமித, கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் மிகக் கடுமையான இராணுவப் பயிற்சியை முடித்து நாட்டுக்குத் திரும்பியிருந்தார். இவரது இந்த சாதனை இலங்கை இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *