சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

 இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கவனத்தை ஈர்த்துள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *